செவ்வாய், 18 ஜனவரி, 2011

கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு பாராட்டு விழா




பதிவு – சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன், நா. ரகு

அகவை 70 இல் கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு விளையாட்டிலும் ஆலயத் தொண்டிலும் சமூகத் தொண்டிலும் தன்னலம் கருதாது சேவையாற்றியமையை நினைவுகூர்ந்து பாராட்டுவிழா ஒன்று கடந்த 16.01.2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அல்வாயூர் கவிஞர் நாடக மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி நிகழ்வு மா. அனந்தராசன் தலைமையில் அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நிகழ்வில் மங்கல விளக்கினை சிவசிறீ இரத்தினேஸ்வரக் குருக்கள்> தி. செல்வநாதன்> வி. சுந்தரலிங்கம் > சி. நிமலன்> து. இராஜவேல் ஆகியோர் ஏற்றினர்.

இறைவணக்கப் பாடலை செல்வி வைகுந்தன் வைஷாளினியும் வரவேற்புரையை விவேகானந்தன் கவிச்செல்வனும் நிகழ்த்தினர். மலர் வெளியீட்டுரையை திரு சு. குணேஸ்வரனும் வாழ்த்துரைகளை மா. கிருஷ்ணகாந்தன்> வே. சிவராஜலிங்கம்> கொற்றை பி. கிருஷ்ணானந்தன்> டி.எம் வேதாபரணம்> செ. சதானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை வே. க வரதவேல் நிகழ்த்தினார். ஏற்புரையை விழா நாயகன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் விழாமலர் வெளியிடப்பட்டது. விழா மலரின் முதற்பிரதியை அல்வாயூர் சிவநேசனிடமிருந்து விரிவுரையாளர் இராஜேஸ்கண்ணன் பெற்றுக்கொண்டார். அம்மலரில் ஆசிச்செய்தி> வாழ்த்துச் செய்திகள்> கவிதைகள்> கட்டுரைகள்> நேர்காணல் என்பன இடம்பெற்றன.

நூலில் சிவசிறீ தியாக சோமாஸ்கந்தராஜாக் குருக்கள் ஆசிச் செய்தியை வழங்கியுள்ளார். கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி, வல்வை ஒன்றிய உபதலைவர் மு. தங்கவேல், நாடகக் கலைஞர் மா. அனந்தராசன், அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தலைவர் தி. செல்வநாதன், மனோகரா ச.ச நிலையத் தலைவர் ந. துரைராஜா, அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய இந்து இளைஞர் மன்றத் தலைவர் து. இராஜவேல், அல்வாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி. நிமலன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியுள்ளனர்.

சிவநாமம் சிவனேசன், சாதனா அகிலேஸ்வரன், கண எதிர்வீரசிங்கம், சிவ. கணேசன், வதிரி சி. இரவீந்திரன், கே.ஆர் திருத்துவராஜா, தம்பி அச்சியன் ஆகியோர் கவிதைகளை எழுதியுள்ளனர்.

கட்டுரைகளை ஓய்வு பெற்ற அதிபர்கள் நா. சந்திரசேகரம், செ. சதானந்தன், கி. கணேசன் ஆகியோர் எழுதியுள்ளனர். நேர்காணலை ஓய்வு பெற்ற ஆசிரியர் சீ. சாந்தநாதன் நிகழ்த்தியுள்ளார்.

கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களைப் பற்றி இளையவர்கள் அறிந்து கொள்ளும்முகமாக நூல் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்க அம்சமாகும். கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வு எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் படங்கள்























வியாழன், 23 டிசம்பர், 2010

ஆலடி ஐங்கரனின் உலாவருகை



அல்வாய் சாமணந்தறை ஆலடி ஐங்கரன் ஊர்தோறும் உலாவரும் காட்சி இது. திருவெம்பாவை இறுதிநாளன்று எங்கள் ஊர் காக்கும் ஆலடியான் ஒருமுறை எல்லோரையும் பார்க்க விரும்பினான். அவனின் வருகையில் சில காட்சிகள்.

(படங்களின் மேல் அழுத்துவதன் ஊடாக படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்)

ஆலடி ஐங்கரன் ஊர் காக்க வருகிறான்

வரவேற்க வீதியெங்கும் தோரணங்கள்

மங்கள வாத்தியம் வீதியெங்கும் ஒலிக்கிறது

ஐங்கரனைப் புடைசூழ்ந்து வரும் பக்தர்கள்


அருட்பார்வையின் அழகுதான் என்னே


வேண்டுதல்கள் நிறைவேற வீதிகளின் வீடுகள் தோறும் வந்தான்

ஆனைமுகனைத் தாங்கி நிற்கும் இளைஞர்கள்

மஞ்சள் வெய்யிலில் அழகாய்ச் சிரிக்கிறான்

பசுமை போர்த்திய கோலம் இது

உபசரிப்பும் உற்சாகமும்


படங்கள் :- சு.குணேஸ்வரன்

அல்வாய் மனோகரா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழா





பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்

அல்வாய் மனோகரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா 20.12.2010 திங்கட்கிழமை பி. ப 3.30 மணிக்கு முன்பள்ளி மண்பத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது மனோகரா முன்பள்ளிப் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் திரு அ. விஜயநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு விசேட விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச சபைச் செயலாளர் திரு சி.வே குலநாயகம் அவர்களும்; அல்வாய் கிராம சேவையாளர் திரு வே. தியாகராசா அவர்களும் கலந்து கொண்டனர்.

பாலர்களின் கலை நிகழ்வுகள் கண்ணுக்கு விருந்தாகின. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் கெளரவிப்பும் மாணவர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நன்றியுரையை பெற்றார் சங்க செயலாளர் திருமதி செல்வமதி தர்மலிங்கம் நிகழ்த்தினார்.

முன்பள்ளி மாணவர்கள், முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறுவர்களை மகிழ்வித்தமை சிறப்பாக அமைந்தது.

மேற்படி நிகழ்வுகளில் இருந்து சில படங்கள்








ஞாயிறு, 21 நவம்பர், 2010

சேவையாளனுக்கு ஒரு பாராட்டு




பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்

தேசத்தின் மரபுரிமை சிறுவருக்கானது கட்டுரைப் போட்டியில் பரிசில் பெற்ற கே. ஆர் திருத்துவராஜாவுக்கு மீளவும் ஒரு பாராட்டு நிகழ்வு அல்வாயில் அவரின் நட்புள்ளங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்துவராஜா பற்றிய பதிவு ஒன்றினை எனது தளத்தில் முன்னரும் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதில்…

மரபுக்கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட திருத்துவராஜா சமூக மேம்பாடு குறித்த கவிதைகளுடன் 50 ற்கு மேற்பட்ட வாழ்த்துப்பாக்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சரம கவிகளையும் இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்பாடல்களையும் ஆலயம்சார் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் சில பாடல்கள் ஒலிப்பேழையாகவும் உள்ளன. பிரதேச ரீதியாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதத்தை இயற்றியமை இவரின் சிறப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக மேம்பாடு குறித்த பல செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்.”

எனக் குறிப்பிட்டுள்ளேன்.(இந்த சுட்டியின்மூலம் முன்னைய பதிவைப் பார்க்கலாம் ://ayalveedu.blogspot.com/2010/09/blog-post.html.

மேற்படி நிகழ்வு ‘திருஇரத்தினவாசம்’ அல்வாய் என்ற முகவரியில் திரு தி செல்வநாதன் குடும்பத்தினரால் 14.11.2010 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு திருமதி பிரசன்னா அனோஜா தம்பதியினர் திருத்துவராஜா தம்பதியினரை மாலையிட்டு வரவேற்றனர். சதானந்தன் அவர்கள் திருத்துவராஜா வின் சமூகப்பணிகளைப் பற்றி விரிவாக தனது தலைமையுரையில் பேசினார்.

தொடர்ந்து உரைகளை ஓய்வுபெற்ற வங்கியாளர் திரு சின்னராஜா, அதிபர் முஅன்பழகன், அதிபர் ச. செல்வானந்தன், ஆசிரியர் சு. குணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் மா. அனந்தராஜனால் வாழ்த்திப் பாடிக் கையளிக்கப்பட்ட ஒலிநாடா சபையில் ஒலிக்க விடப்பட்டது.

நிகழ்வில் திருத்துவராஜாவின் ஏற்புரையினை அடுத்து செல்வநாதன் நன்றியுரை பகர்ந்தார். மற்றவர்களுடன் முரண்பாடில்லாமல் பழகும் நற்பண்பும்> அவரின் சேவைகளும் விதந்துரைக்கப்பட்டன. மிக விரைவில் அவர் யாத்த கவிதைகள் தொகுப்பாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் உரையாற்றியவர்களால் முன்வைக்கப்பட்டது.

நிகழ்வின் படங்கள் சில

சனி, 9 அக்டோபர், 2010

வல்லிபுர மாயவன்




இவ்வருடம் வல்லிபுரமாயக் கண்ணனுக்கு வருடாந்த உற்சவம் இடம்பெற்றது. யுத்தத்தின் பின்னர் கொஞ்சம் ஆசுவாசமாக சென்றுவரக்கூடியதாக இருந்தது. யுத்தம்> இடப்பெயர்வு> காணாமற்போதல்> குடும்பங்களின் இழப்பு> சொல்லமுடியாத வேதனைகள் எல்லாம் சுமந்து எங்கள் உறவுகள் கோயிலுக்கு வரமுடியாத நிலையில் தப்பிப் பிழைத்தவர்களும் கோயிலுக்கு சென்றுவரக்கூடியவர்களும் தமக்கும் தங்கள் உறவுகளுக்காகவும் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

நானும் என் குடும்பத்துடன் சென்றுவரக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அதன்போதான சில ஒளிப்படங்கள் என் வலைப்பதிவு நண்பர்களுக்காக.