ஞாயிறு, 21 நவம்பர், 2010

சேவையாளனுக்கு ஒரு பாராட்டு




பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்

தேசத்தின் மரபுரிமை சிறுவருக்கானது கட்டுரைப் போட்டியில் பரிசில் பெற்ற கே. ஆர் திருத்துவராஜாவுக்கு மீளவும் ஒரு பாராட்டு நிகழ்வு அல்வாயில் அவரின் நட்புள்ளங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்துவராஜா பற்றிய பதிவு ஒன்றினை எனது தளத்தில் முன்னரும் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதில்…

மரபுக்கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட திருத்துவராஜா சமூக மேம்பாடு குறித்த கவிதைகளுடன் 50 ற்கு மேற்பட்ட வாழ்த்துப்பாக்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சரம கவிகளையும் இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்பாடல்களையும் ஆலயம்சார் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் சில பாடல்கள் ஒலிப்பேழையாகவும் உள்ளன. பிரதேச ரீதியாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதத்தை இயற்றியமை இவரின் சிறப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக மேம்பாடு குறித்த பல செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்.”

எனக் குறிப்பிட்டுள்ளேன்.(இந்த சுட்டியின்மூலம் முன்னைய பதிவைப் பார்க்கலாம் ://ayalveedu.blogspot.com/2010/09/blog-post.html.

மேற்படி நிகழ்வு ‘திருஇரத்தினவாசம்’ அல்வாய் என்ற முகவரியில் திரு தி செல்வநாதன் குடும்பத்தினரால் 14.11.2010 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு திருமதி பிரசன்னா அனோஜா தம்பதியினர் திருத்துவராஜா தம்பதியினரை மாலையிட்டு வரவேற்றனர். சதானந்தன் அவர்கள் திருத்துவராஜா வின் சமூகப்பணிகளைப் பற்றி விரிவாக தனது தலைமையுரையில் பேசினார்.

தொடர்ந்து உரைகளை ஓய்வுபெற்ற வங்கியாளர் திரு சின்னராஜா, அதிபர் முஅன்பழகன், அதிபர் ச. செல்வானந்தன், ஆசிரியர் சு. குணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் மா. அனந்தராஜனால் வாழ்த்திப் பாடிக் கையளிக்கப்பட்ட ஒலிநாடா சபையில் ஒலிக்க விடப்பட்டது.

நிகழ்வில் திருத்துவராஜாவின் ஏற்புரையினை அடுத்து செல்வநாதன் நன்றியுரை பகர்ந்தார். மற்றவர்களுடன் முரண்பாடில்லாமல் பழகும் நற்பண்பும்> அவரின் சேவைகளும் விதந்துரைக்கப்பட்டன. மிக விரைவில் அவர் யாத்த கவிதைகள் தொகுப்பாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் உரையாற்றியவர்களால் முன்வைக்கப்பட்டது.

நிகழ்வின் படங்கள் சில

1 கருத்து: