வெள்ளி, 21 ஜூன், 2013

நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி - மாணவர் கௌரவிப்பு2012 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றை நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி நிகழ்த்தியது. மேற்படி நிகழ்வு வங்கிக் காரியாலய மண்டபத்தில் 21.06.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் எல்லைக்குட்பட்ட மாணவர்களில் வங்கிக்கணக்கினைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு மேற்படி கெளரவிப்பு நிகழ்வை நிகழ்த்தி பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.