ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வட அல்வை இளங்கோ சனசமூகநிலையத்தின் முத்தமிழ் விழா


வட அல்வை இளங்கோ சனசமூகநிலையத்தின் 79 வது ஆண்டு நிறைவையொட்டிய முத்தமிழ் விழா நிகழ்வு 03.09.2011 அன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வு தொடர்ந்து மறுநாளும் இடம்பெறுகின்றது. நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில.முதல்நாள் நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில

நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் ந.நிர்மலன்
(இளங்கோ ச.ச நிலையத் தலைவர்)


பிரதேச செயலர் இ.வரதீஸ்வரன் - பிரதம விருந்தினர் உரை


மூத்த எழுத்தாளர் தெணியான் - சிறப்பு விருந்தினர் உரை


எழுத்தாளர் மு.அநாதரட்சகன் - சிறப்பு விருந்தினர் உரை


சு.குணேஸ்வரன் - சிறப்பு விருந்தினர் உரை


செம்மொழி வாழ்த்து நடனம்


சங்கீத வித்துவான் ஏ.கே கருணாகரன் நிகழ்த்தும்
கர்நாடக இசை விருந்துபதிவுகள் தொடரும்...
ஞாயிறு, 31 ஜூலை, 2011

கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’
நூல் வெளியீடு


மறைந்த கோவிந்தசாமி லோகநேசன் (கோவி நேசன்) எழுதிய ‘சிறுவர் அரங்கக் கோலங்கள்’ என்னும் சிறுவர் நாடகப் பிரதிகளைக் கொண்டமைந்த நூல் வெளியீடு 31.07.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணம், வதிரி தமிழ்மன்ற மண்டபத்தில் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

ஆசிரியராக, அதிபராக, பல்துறை ஆற்றல் மிக்க கலைஞனாகத் திகழ்ந்த கோ. லோகநேசன் மறைந்த 31 ஆம் நினைவு நாளிலே இந்நூல் வெளியீடு இடம்பெற்றது.
நிகழ்வில் செல்வி தர்சிகா தங்கராசா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களும், மதிப்பீட்டுரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். கோவி நேசனின் கவிதைகள் பற்றிய உரையை க. சின்னராஜன் அவர்களும், சிறப்புரையை செ. சதானந்தன் அவர்களும் நிகழ்த்தினர். நன்றியுரையை இ. யோகராசா நிகழ்த்தினார்.

கோவி நேசன் அவர்கள்; ஆசிரியராகப் பணிபுரிந்த காலங்களில் பாடசாலைப் பிள்ளைகளுக்காக எழுதி நெறியாள்கை செய்த நாடகங்களே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஈழத்து சிறுவர் நாடகங்களுக்கு கோவி நேசனின் எழுத்துருக்களும் எதிர்காலத்தில் பங்களிப்புச் செய்யும் என்ற எண்ணத்தை இந்நூலில் உள்ளடங்கியுள்ள நாடகப் பிரதிகள் எடுத்துக் காட்டுகின்றன.

பாடசாலைகளிலும் நூலகங்களிலும் சிறுவர்களின் கைகளிலும் இருக்க வேண்டிய தொகுப்பு. இதனை அவரின் நினைவு நாளிலே தொகுப்பு வடிவமாக்கிய அன்னாரின் குடும்பத்தினரின் பணி மிகப் பெறுமதியானது.

பதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்


சனி, 16 ஏப்ரல், 2011

அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் தேர்


அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா உற்சவம் 16.04.2001 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் ஒளிப்படங்களைப் பார்க்கலாம்.

ஒளிப்படங்கள் - சு.குணேஸ்வரன்

(படங்களின் மேல் அழுத்துவதன் ஊடாக பெரிதாகப் பார்க்கலாம்)
ஒளிப்படங்கள் - சு.குணேஸ்வரன்