ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களுக்கு கெளரவிப்பு விழா


பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்

பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ‘பேராசிரியர்’ தகுதிநிலையை அடைந்தமையிட்டு அவரது கிராமத்தில் கெளரவிப்பு நிகழ்வு ஒன்று மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் கோயில் முன்றலில் 22.01.2011 மாலை 2.30 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வு வற்றாப்பளை மகாவித்தியாலய அதிபர் திரு சி. ராஜா தலைமையில் இடம்பெற்றது.

முன்னதாக விழா நாயகனை மாலையிட்டு அழைத்து வந்தனர். தொடர்ந்து விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறைவணக்கப்பாடலை செல்விகள் சமுத்திரா ஜீவானந்தன், யதுர்ஷா நவரத்தினராசா ஆகியோரும் வரவேற்புரையினை ஆசிரியர் க.தர்மதேவன் அவர்களும் ஆசியுரையை ஆலடிப்பிள்ளையார் ஆலய குரு அவர்களும் நிகழ்த்தினர்.

தொடர்ந்து பாராட்டுரைகள் இடம்பெற்றன. ஓய்வுபெற்ற அதிபர் திரு தா. வீரசிங்கம், GTZ நிபுணத்துவ ஆலோசகர் சுந்தரம் டிவகலாலா, யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச. சத்தியசீலன், யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் மா சின்னத்தம்பி, கரவெட்டிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் த. தவேந்திரராஜா, அகவிழி ஆசிரியர் தெ. மதுசூதனன், வவுனியா பட்டப்பின்படிப்பு கல்விநெறி இணைப்பாளர் பேராசிரியர் க. சின்னத்தம்பி, யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி ஆகியோர் பாராட்டுரைகளை நிகழ்த்தினர்.

நிகழ்வில் ‘கல்விச் சமூகவியல்’ என்னும் பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களின் நூல் அறிமுகமும் இடம்பெற்றது. அதனை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து விழா நாயகன் கெளரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ஏற்புரையினை நிகழ்த்தினார்.

ஏற்புரையின் முன்னதாக தான் இந்த நிலைக்கு உயர்வடைவதற்கு கொடிக்கால்களாக இருந்த தன் ஆசிரியர் மற்றும் உறவுகளை மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் தன் இளமைக்காலக் கல்வி, தன் தொழில், பட்டப்படிப்பு நிலைகள், இளைய சந்ததியினர் கருத்திற் கொள்ளவேண்டிய அம்சங்கள், கிராம மக்களது அன்பும் ஒற்றுமையும் உயர்வும்; ஆகியன குறித்துப் பேசினார்.

நன்றியுரையினை திரு மா. ரவிரதன் நிகழ்த்தினார். உறவுகளும் கல்விச் சமூகமும் பெருமளவாகத் திரண்டிருந்த மேற்படி நிகழ்வு உற்சாகத்தையும் பெருமிதத்தையும் தந்தது.

நிகழ்வின் படங்கள்
(படங்களின்மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாகப் பார்க்கலாம்)
வாழ்த்துரைகளும் கெளரவிப்பும்

கொடிக்கால்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்


ஊரும் உறவுகளும் கல்விச் சமூகமும்


செவ்வாய், 18 ஜனவரி, 2011

கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு பாராட்டு விழா
பதிவு – சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன், நா. ரகு

அகவை 70 இல் கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு விளையாட்டிலும் ஆலயத் தொண்டிலும் சமூகத் தொண்டிலும் தன்னலம் கருதாது சேவையாற்றியமையை நினைவுகூர்ந்து பாராட்டுவிழா ஒன்று கடந்த 16.01.2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அல்வாயூர் கவிஞர் நாடக மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி நிகழ்வு மா. அனந்தராசன் தலைமையில் அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நிகழ்வில் மங்கல விளக்கினை சிவசிறீ இரத்தினேஸ்வரக் குருக்கள்> தி. செல்வநாதன்> வி. சுந்தரலிங்கம் > சி. நிமலன்> து. இராஜவேல் ஆகியோர் ஏற்றினர்.

இறைவணக்கப் பாடலை செல்வி வைகுந்தன் வைஷாளினியும் வரவேற்புரையை விவேகானந்தன் கவிச்செல்வனும் நிகழ்த்தினர். மலர் வெளியீட்டுரையை திரு சு. குணேஸ்வரனும் வாழ்த்துரைகளை மா. கிருஷ்ணகாந்தன்> வே. சிவராஜலிங்கம்> கொற்றை பி. கிருஷ்ணானந்தன்> டி.எம் வேதாபரணம்> செ. சதானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை வே. க வரதவேல் நிகழ்த்தினார். ஏற்புரையை விழா நாயகன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் விழாமலர் வெளியிடப்பட்டது. விழா மலரின் முதற்பிரதியை அல்வாயூர் சிவநேசனிடமிருந்து விரிவுரையாளர் இராஜேஸ்கண்ணன் பெற்றுக்கொண்டார். அம்மலரில் ஆசிச்செய்தி> வாழ்த்துச் செய்திகள்> கவிதைகள்> கட்டுரைகள்> நேர்காணல் என்பன இடம்பெற்றன.

நூலில் சிவசிறீ தியாக சோமாஸ்கந்தராஜாக் குருக்கள் ஆசிச் செய்தியை வழங்கியுள்ளார். கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி, வல்வை ஒன்றிய உபதலைவர் மு. தங்கவேல், நாடகக் கலைஞர் மா. அனந்தராசன், அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தலைவர் தி. செல்வநாதன், மனோகரா ச.ச நிலையத் தலைவர் ந. துரைராஜா, அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய இந்து இளைஞர் மன்றத் தலைவர் து. இராஜவேல், அல்வாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி. நிமலன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியுள்ளனர்.

சிவநாமம் சிவனேசன், சாதனா அகிலேஸ்வரன், கண எதிர்வீரசிங்கம், சிவ. கணேசன், வதிரி சி. இரவீந்திரன், கே.ஆர் திருத்துவராஜா, தம்பி அச்சியன் ஆகியோர் கவிதைகளை எழுதியுள்ளனர்.

கட்டுரைகளை ஓய்வு பெற்ற அதிபர்கள் நா. சந்திரசேகரம், செ. சதானந்தன், கி. கணேசன் ஆகியோர் எழுதியுள்ளனர். நேர்காணலை ஓய்வு பெற்ற ஆசிரியர் சீ. சாந்தநாதன் நிகழ்த்தியுள்ளார்.

கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களைப் பற்றி இளையவர்கள் அறிந்து கொள்ளும்முகமாக நூல் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்க அம்சமாகும். கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வு எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் படங்கள்