2014 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் விருதினை எனது பிறந்தகமான கெருடாவில் கிராமத்தில் இருந்து முதல்முதல் பெற்றுக்கொண்ட கலைஞர் திரு இ. ஆழ்வாப்பிள்ளை அவர்களுக்கான கௌரவிப்பு விழா நிகழ்வொன்று கெருடாவில் தொண்டைமானாறு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு சி. பிரதீபன் தலைமையில் அண்ணா ச.ச நிலையம் அருகில் 03.02.2015 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த ஜெயசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொன். சுகந்தன், ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன் அவர்களும் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினர்களாக அதிபர் இரா. சிறீநடராசா, ஆசிரியர் சு. குணேஸ்வரன், ஆசிரியர் து. ராமதாஸ், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி T.S.Meedin,ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ABGR Mendis ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் பாராட்டுரைகள் இடம்பெற்றதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
(நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்)
பதிவு - சு. குணேஸ்வரன்