ஞாயிறு, 31 ஜனவரி, 2016

கௌரவிப்பு விழா
அண்மையில் கலாபூஷணம் விருது பெற்ற மயிலு கணேசலிங்கம்(இலக்கியம், நாடகம்),பேரின்பநாயகி சிவகுரு (நடனம்) ஆகியோரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அல்வாய் மனோகரா முன்பள்ளி மண்டபத்தில் 31.01.2016 மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது. திரு க. வரதவேல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பருத்தித்துறை கலாசார உத்தியோகத்தர் செல்வி சுகுணா சேனாதிராசா முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ஆசியுரையை சிவஶ்ரீ தியாகசோமஸ்கந்தராஜாக் குருக்கள் நிகழ்த்தினார். பாராட்டுரைகளை திரு மா. பாலேந்திரன், கலாபூஷணம் மா. அனந்தராசன், திரு கி. கணேசன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், திரு செ. சதானந்தன், திரு மா. கிருஷ்ணகாந்தன், திரு சி. சிவராஜலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை விழா அமைப்பாளர்கள் சார்பில் திரு தி.செல்வநாதன் நிகழ்த்தினார். ஏற்புரைகளை கலாபூஷணம் ம. கணேசலிங்கம், கலாபூஷணம்  பேரின்பநாயகி சிவகுரு ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.