வியாழன், 23 டிசம்பர், 2010

அல்வாய் மனோகரா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழா

பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்

அல்வாய் மனோகரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா 20.12.2010 திங்கட்கிழமை பி. ப 3.30 மணிக்கு முன்பள்ளி மண்பத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது மனோகரா முன்பள்ளிப் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் திரு அ. விஜயநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு விசேட விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச சபைச் செயலாளர் திரு சி.வே குலநாயகம் அவர்களும்; அல்வாய் கிராம சேவையாளர் திரு வே. தியாகராசா அவர்களும் கலந்து கொண்டனர்.

பாலர்களின் கலை நிகழ்வுகள் கண்ணுக்கு விருந்தாகின. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் கெளரவிப்பும் மாணவர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நன்றியுரையை பெற்றார் சங்க செயலாளர் திருமதி செல்வமதி தர்மலிங்கம் நிகழ்த்தினார்.

முன்பள்ளி மாணவர்கள், முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறுவர்களை மகிழ்வித்தமை சிறப்பாக அமைந்தது.

மேற்படி நிகழ்வுகளில் இருந்து சில படங்கள்
2 கருத்துகள்:

  1. குழந்தைகளின் சிரிப்பில்
    நாங்களும் மகிழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகளின் உலகம். அது ஒரு தனி உலகம். பெரியவர்கள் நாங்கள் அவர்களின் உலகத்தைச் சிதைக்கக்கூடாதல்லவா? நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு