செவ்வாய், 18 ஜனவரி, 2011

கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு பாராட்டு விழா
பதிவு – சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன், நா. ரகு

அகவை 70 இல் கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு விளையாட்டிலும் ஆலயத் தொண்டிலும் சமூகத் தொண்டிலும் தன்னலம் கருதாது சேவையாற்றியமையை நினைவுகூர்ந்து பாராட்டுவிழா ஒன்று கடந்த 16.01.2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அல்வாயூர் கவிஞர் நாடக மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி நிகழ்வு மா. அனந்தராசன் தலைமையில் அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நிகழ்வில் மங்கல விளக்கினை சிவசிறீ இரத்தினேஸ்வரக் குருக்கள்> தி. செல்வநாதன்> வி. சுந்தரலிங்கம் > சி. நிமலன்> து. இராஜவேல் ஆகியோர் ஏற்றினர்.

இறைவணக்கப் பாடலை செல்வி வைகுந்தன் வைஷாளினியும் வரவேற்புரையை விவேகானந்தன் கவிச்செல்வனும் நிகழ்த்தினர். மலர் வெளியீட்டுரையை திரு சு. குணேஸ்வரனும் வாழ்த்துரைகளை மா. கிருஷ்ணகாந்தன்> வே. சிவராஜலிங்கம்> கொற்றை பி. கிருஷ்ணானந்தன்> டி.எம் வேதாபரணம்> செ. சதானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை வே. க வரதவேல் நிகழ்த்தினார். ஏற்புரையை விழா நாயகன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் விழாமலர் வெளியிடப்பட்டது. விழா மலரின் முதற்பிரதியை அல்வாயூர் சிவநேசனிடமிருந்து விரிவுரையாளர் இராஜேஸ்கண்ணன் பெற்றுக்கொண்டார். அம்மலரில் ஆசிச்செய்தி> வாழ்த்துச் செய்திகள்> கவிதைகள்> கட்டுரைகள்> நேர்காணல் என்பன இடம்பெற்றன.

நூலில் சிவசிறீ தியாக சோமாஸ்கந்தராஜாக் குருக்கள் ஆசிச் செய்தியை வழங்கியுள்ளார். கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி, வல்வை ஒன்றிய உபதலைவர் மு. தங்கவேல், நாடகக் கலைஞர் மா. அனந்தராசன், அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தலைவர் தி. செல்வநாதன், மனோகரா ச.ச நிலையத் தலைவர் ந. துரைராஜா, அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய இந்து இளைஞர் மன்றத் தலைவர் து. இராஜவேல், அல்வாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி. நிமலன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியுள்ளனர்.

சிவநாமம் சிவனேசன், சாதனா அகிலேஸ்வரன், கண எதிர்வீரசிங்கம், சிவ. கணேசன், வதிரி சி. இரவீந்திரன், கே.ஆர் திருத்துவராஜா, தம்பி அச்சியன் ஆகியோர் கவிதைகளை எழுதியுள்ளனர்.

கட்டுரைகளை ஓய்வு பெற்ற அதிபர்கள் நா. சந்திரசேகரம், செ. சதானந்தன், கி. கணேசன் ஆகியோர் எழுதியுள்ளனர். நேர்காணலை ஓய்வு பெற்ற ஆசிரியர் சீ. சாந்தநாதன் நிகழ்த்தியுள்ளார்.

கலைஞர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களைப் பற்றி இளையவர்கள் அறிந்து கொள்ளும்முகமாக நூல் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்க அம்சமாகும். கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வு எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் படங்கள்2 கருத்துகள்:

 1. Navam K sent you a message.

  Navam K NavaratnamJanuary 19, 2011 at 2:42pm
  Subject: பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
  மாலி அவர்களுக்கு எனது
  மனமுவந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  க. நவம்
  (கனடா)

  பதிலளிநீக்கு
 2. கணபதிப்பிள்ளை பாக்கியராசா (மாலி) அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு