ஞாயிறு, 26 ஜூன், 2011
செல்வச்சந்திதி முருகன்
ஒரு தேடலில் கிடைத்தபோது...
சனி, 16 ஏப்ரல், 2011
அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் தேர்
அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா உற்சவம் 16.04.2001 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் ஒளிப்படங்களைப் பார்க்கலாம்.
ஒளிப்படங்கள் - சு.குணேஸ்வரன்
செவ்வாய், 1 மார்ச், 2011
மதியாமடு விவேகானந்தா வித்தியாலய விளையாட்டுப்போட்டி
நான் கடந்த வருட இறுதிவரை கற்பித்த எனது பாடசாலை விளையாட்டுப்போட்டியில் அண்மையில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
சிதைவுக்குப் பின்னர் மீண்டு கொண்ட கிராமத்தில் அமையப்பெற்ற மதியாமடு கிராமத்தின் மத்தியில் மிடுக்காக நிமிர்ந்து நிற்கிறது மதியாமடு விவேகானந்தா வித்தியாலயம். எனது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வான ‘செம்மொழி மாநாட்டில்’ கலந்து கொள்ளும் பேறு கிடைத்தபோது நான் கற்பித்துக் கொண்டிருந்த பாடசாலையும் அதுதான்.
வவுனியா வடக்கு புளியங்குளம் மதியாமடு விவேகானந்தா வித்தியால இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த 25.02.2011 வெள்ளிக்கிழமை வித்தியாலய அதிபர் திரு கி.சிவசோதி தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க. பரந்தாமன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ.சிறீகரன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் vovcod பொதுசன தொடர்பு அதிகாரியுமான திரு க.பொன்னையா, நெடுங்கேணிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ.விநாயகமூர்த்தி, புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெ.எம்.எம். ஜமால், 27 வது படையணி மேஜர் டிக்கும்புற, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
ஓய்வுபெற்ற அதிபர் திரு ம.சிவகுருநாதன், பரந்தன் கிராம அலுவலர் திரு து.மரியசீலன், நயினாமடு கிராம அலுவலர் செல்வி சி.பிரேமிளா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் எளிமையாகவும் சிறப்பாகவும் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாணவர்களும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது.
பதிவும் படங்களும் :- சு.குணேஸ்வரன்
நிகழ்வின் படங்கள் சில
விருந்தினர்கள் மங்களவிளக்கேற்றலின்போது
இல்லக் கொடிகளை ஏற்றும் ஆசிரியர்கள் தேவகுமார்,தவரூபன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)