சனி, 9 அக்டோபர், 2010

வல்லிபுர மாயவன்




இவ்வருடம் வல்லிபுரமாயக் கண்ணனுக்கு வருடாந்த உற்சவம் இடம்பெற்றது. யுத்தத்தின் பின்னர் கொஞ்சம் ஆசுவாசமாக சென்றுவரக்கூடியதாக இருந்தது. யுத்தம்> இடப்பெயர்வு> காணாமற்போதல்> குடும்பங்களின் இழப்பு> சொல்லமுடியாத வேதனைகள் எல்லாம் சுமந்து எங்கள் உறவுகள் கோயிலுக்கு வரமுடியாத நிலையில் தப்பிப் பிழைத்தவர்களும் கோயிலுக்கு சென்றுவரக்கூடியவர்களும் தமக்கும் தங்கள் உறவுகளுக்காகவும் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

நானும் என் குடும்பத்துடன் சென்றுவரக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அதன்போதான சில ஒளிப்படங்கள் என் வலைப்பதிவு நண்பர்களுக்காக.





















திங்கள், 6 செப்டம்பர், 2010

விவேகானந்தா பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி


தொண்டைமானாறு கெருடாவில் விவேகானந்தா பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி
05.09.2010 மாலை 2.30மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வு சார்ந்த சில ஒளிப்படங்கள் இதோ






செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தொண்டைமானாறு செல்வச்சந்திதி முருகனின் தேர்த்திருவிழா


தொண்டைமானாறு செல்வச்சந்திதி முருகனின் தேர்த்திருவிழா 23.08.2010 திங்கள் இடம்பெற்றது. சந்நிதியான் வீதியில் எனது கமராவில் சிக்கிய சில படங்கள் என் வலைப்பதிவு நண்பர்களுக்காக.

பதிவு சு. குணேஸ்வரன்


அசைந்தாடி வருகிறான் சந்நிதியான்



அசைந்தாடி வருபவனைப் பார்த்து ஆனந்தக் கூத்தோ?



வேண்டுதல்கள் வரிசையாக நிறைவேறுகின்றன




உன் வாசல் வந்து சேர்த்தேனையா




கோயிலில் சிறுவர்களின் கனவுக் கடைக்காரன்





நீண்ட இடைவெளியின் பின் குசலம் விசாரிப்பு




இது இன்னும் இன்னும் நிலைத்திருக்க வேண்டுமையா




கிறீம் கடைகளின் கலகப்பு




எந்நிதியும் தருபவனின் சப்பறத்தில் ஏறி நின்று பார்த்தாலும் அவன் கோபிக்க மாட்டான்