ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களுக்கு கெளரவிப்பு விழா


பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்

பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ‘பேராசிரியர்’ தகுதிநிலையை அடைந்தமையிட்டு அவரது கிராமத்தில் கெளரவிப்பு நிகழ்வு ஒன்று மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் கோயில் முன்றலில் 22.01.2011 மாலை 2.30 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வு வற்றாப்பளை மகாவித்தியாலய அதிபர் திரு சி. ராஜா தலைமையில் இடம்பெற்றது.

முன்னதாக விழா நாயகனை மாலையிட்டு அழைத்து வந்தனர். தொடர்ந்து விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறைவணக்கப்பாடலை செல்விகள் சமுத்திரா ஜீவானந்தன், யதுர்ஷா நவரத்தினராசா ஆகியோரும் வரவேற்புரையினை ஆசிரியர் க.தர்மதேவன் அவர்களும் ஆசியுரையை ஆலடிப்பிள்ளையார் ஆலய குரு அவர்களும் நிகழ்த்தினர்.

தொடர்ந்து பாராட்டுரைகள் இடம்பெற்றன. ஓய்வுபெற்ற அதிபர் திரு தா. வீரசிங்கம், GTZ நிபுணத்துவ ஆலோசகர் சுந்தரம் டிவகலாலா, யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச. சத்தியசீலன், யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் மா சின்னத்தம்பி, கரவெட்டிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் த. தவேந்திரராஜா, அகவிழி ஆசிரியர் தெ. மதுசூதனன், வவுனியா பட்டப்பின்படிப்பு கல்விநெறி இணைப்பாளர் பேராசிரியர் க. சின்னத்தம்பி, யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி ஆகியோர் பாராட்டுரைகளை நிகழ்த்தினர்.

நிகழ்வில் ‘கல்விச் சமூகவியல்’ என்னும் பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களின் நூல் அறிமுகமும் இடம்பெற்றது. அதனை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து விழா நாயகன் கெளரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ஏற்புரையினை நிகழ்த்தினார்.

ஏற்புரையின் முன்னதாக தான் இந்த நிலைக்கு உயர்வடைவதற்கு கொடிக்கால்களாக இருந்த தன் ஆசிரியர் மற்றும் உறவுகளை மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் தன் இளமைக்காலக் கல்வி, தன் தொழில், பட்டப்படிப்பு நிலைகள், இளைய சந்ததியினர் கருத்திற் கொள்ளவேண்டிய அம்சங்கள், கிராம மக்களது அன்பும் ஒற்றுமையும் உயர்வும்; ஆகியன குறித்துப் பேசினார்.

நன்றியுரையினை திரு மா. ரவிரதன் நிகழ்த்தினார். உறவுகளும் கல்விச் சமூகமும் பெருமளவாகத் திரண்டிருந்த மேற்படி நிகழ்வு உற்சாகத்தையும் பெருமிதத்தையும் தந்தது.

நிகழ்வின் படங்கள்
(படங்களின்மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாகப் பார்க்கலாம்)








வாழ்த்துரைகளும் கெளரவிப்பும்













கொடிக்கால்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்










ஊரும் உறவுகளும் கல்விச் சமூகமும்


















8 கருத்துகள்:

  1. பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. face book நண்பர்கள் பகிர்ந்தவை

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan வாழ்த்துக்கள்.
    9 hours ago · Unlike · 1 person

    Vallipuram Yogendra விழா நாயகன் பேராசிரியர் கருணாநிதி அவர்கள் மேலும் பல பெருமைகளை அடைய எமது வாழ்த்துக்கள் .
    எம்மோடு இந்நிகழ்வினை பகிர்ந்தமைக்கு குணேஸ்வரன் அவர்களிற்கு எமது நன்றிகள் .
    8 hours ago · Unlike · 1 person

    Navam K Navaratnam கருணாநிதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! பகிர்ந்த உங்களுக்கு நன்றியும்!
    8 hours ago · Unlike · 1 person

    Packiyanathan Murugesu பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களினை அவரது குடும்பமாக அழைத்து. அவர் பேராசிரியராக நிலைப் படுட்த்தபட்டது தொடர்பாக அவருக்கு அவரது பிறந்த மண் பாராட்டுவிழா வைத்து அவருக்குரிய மரியாதை செய்யப்பட்டதும் அத்தோடு அவர் தனது உயர்விற்கு ஊன்றுகோலாக இருந்தவர்ளுக்கும் அவர் நன்றி செலுத்தியது நெகிழ வைக்கின்றது.

    தங்கள் பதிவிற்கும் படங்களுக்கும் நன்றி.
    மு.பாக்கியநாதன் குடும்பம்
    5 hours ago · Unlike · 1 person

    பதிலளிநீக்கு
  3. நண்பர், பேராசிரியர் மா.கருணாநிதிக்கு முதலில் எங்களது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். பொதுவாக எம்மவர்களின் திறமைகள் பிறந்த ஊரில் தெரிவதில்லை. ஏனையவர்கள் பாராட்டி முடிந்த பின் தான் நாம் விழித்துக் கொள்கின்றோம். அந்தத் தவறைச் செய்யாது, சுடச் சுட ஒரு கல்விமானுக்கு விழா எடுத்ததன் மூலம் அவர் பிறந்த ஊர் பெருமையடைகின்றது. அவர் கல்வியில் மட்டுமல்லாது பண்பாட்டிலும் சிறந்தவர் என்பதை அவர் நடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து கௌரவப் படுத்தியதிலிருந்து தெரிகின்றது. உங்கள் பாராட்டில் நாங்களும் கலந்து கொண்டு மகிழ்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களின் கெளரவிப்பு விழா பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. my face book இல் நண்பர்கள் மேலும் பகிர்ந்தவை

    Selva Nadesu
    perasiriyar karuna enathu mithunar...avar uyarvukku paaraaddu vila...nanri periyavarkale...thodarka um pani...en ayalavaraakiya avarudan....nendakaalam anpukku paaththiramaanavanaaka irunthullen...25 varudankalukku melaka thodarpu attu irunthaalum ..alvida mudiyaa anpudan inrum ullen...vaalk avar pallandu....inum pala uyarvu pera aaldiyaanai vendukinren....kunes unkal sevai vaalka...makilvaana vidayaththai udan pakira mudiyaamikku mannikkavum.
    Wednesday at 09:39 · Like

    Rasiah Aingaran
    First of all i would thank to Mr Subramaniam kuneswaran because of let to know the Village incidents. and i m very happy to see professor M karunanithy and his familly on this day.it was a grand celebration not only their family also for our people.We should be proud of Professor Mr M Karunanithy.
    about an hour ago · Like

    பதிலளிநீக்கு
  6. இந்த நிகழ்வு 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

    பதிலளிநீக்கு
  7. பேராசிரியர் மார்க்கண்டு கருணாநிதி அவர்களின் கெளவிப்பு நிகழ்வை நேரில் கண்டுகொண்டவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு