வெள்ளி, 16 ஜனவரி, 2015

பட்டத்திருவிழா

பட்டத்திருவிழா

வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நிகழ்ந்த பட்டத்திருவிழாவின் அழகான ஒளிப்படங்களை பின்வரும் இணையத்தளத்தில் இருந்து முழுதாகப் பார்க்கலாம்.
http://www.valvettithurai.org/kites-beautify-valvettithurai-sky-in-jaffna-kites-festival-commences-3522.html


செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

கெருடாவில் நற்பணி மன்றத்தின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும்
   கெருடாவில் நற்பணி மன்றத்தின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும் நிகழ்வும் 05.08.2014 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கெருடாவில் விவேகானந்தா சனசமூக முன்றலில் இடம்பெற்றது. 

   நிகழ்வுக்கு நற்பணி மன்றத் தலைவர் பா. சுசீந்திரசிங்கம் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அதிபர் இரா. சிறீநடராஜா கலந்து சிறப்பித்தார். 

   சிறப்பு விருந்தினர்களாக திரு திருமதி வெ. உதயகுமாரன், திரு திருமதி சி. சிறீகாந்தராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினர்களாக திரு கு. ரவீந்திரன் (அதிபர்), திரு கே. உதயரூபன் (அதிபர்), திரு சு. குணேஸ்வரன் (ஆசிரியர்), திரு பு. சாந்தரூபன் (கிராம அலுவலர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

   கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டனர். மேலும் பல்கலைக்கழகம், கல்வியியற்கல்லூரி ஆகியவற்றில் கற்றுவரும் பிரதேச மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு நற்பணி மன்றத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரிய சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. 


வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கெருடாவில் இளைஞர்களின் காவடியாட்டம்

செல்வச்சந்நிதி முருகன் வருடாந்தத் திருவிழாவின் பூங்காவனத் திருவிழாவான 15.08.2013 அன்று எனது பிறந்தகமான கெருடாவில் இளைஞர்கள் காவடி எடுத்தனர். கெருடாவில் மாயவர் ஆலயத்தில் இருந்து கெருடாவில் வைரவர் ஆலயத்தின் ஊடாக சந்நிதி முருகனை சென்றடைந்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். காவடியாட்டத்தில் இருந்து சில படங்கள்.